தமிழ்த் தலைமைகளின் இன்றைய நிலைமை போலவே இருக்கின்றது இந்த நாடும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, June 4th, 2019

இதுவரைக் காலமும் தமிழ் மக்களின் நலன்கள் சார்ந்து செயற்படாமல், கிடைத்த சந்தர்ப்பங்களை நாசமாக்கிவிட்டு, இனிமேல்தான் தமிழ் மக்களின் எதிர்காலம் தொடர்பாகச் சிந்தித்து நிதானதாகச் செய்றப்படப் போவதாகக் கூறுகின்ற தமிழ்த் தலைமைகளின் இன்றைய நிலைமை போலவே இருக்கின்றது இந்த நாடும், நாட்டின் அனைத்துத் துறைகளும் என்றே கூற வேண்டியிருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற இலங்கை தேயிலை ஆராய்ச்சி சபை தொடர்பிலான திருத்தச் சட்டமூலம் குறித்த விவாதத்;தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இவ்வளவு காலமும் தமிழ் மக்களின் எதிர்காலம் தொடர்பில் தாங்கள் சிந்தித்து செயற்படவில்லை என்பதை இப்பேதாவது இந்தத் தமிழ்த் தலைமைகள் ஏற்றுக் கொண்டுள்ளன. அதேபோன்று, இந்தத் தமிழ்த் தலைமைகளை நம்பி அழிவுகளினபால்; போயுள்ள தமிழ் மக்களைப் போன்றே, இந்த நாட்டின் அழிவுகளின்பால் போயுள்ள ஏனைய அனைத்துத் துறைகளையும் கட்டியெழப்புவது தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டிய ஏற்பாடுகள் தேவை என்பதை இங்கு வலியுறுத்துவதுடன், அந்த ஏற்பாடுகள் இந்தத் தமிழ்த் தலைமைகளின் வெறும் வாய் வார்த்தைகளாக மாத்திரம் இருந்து விடாமல், செயற்பாட்டு ரீதியாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையினையும் இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.

தேயிலை உற்பத்தி சார்ந்த  தொழிற்துறையில் ஈடுபட்டிருக்கின்ற மலையக மக்கள் தொடர்பில் உரிய அவதானங்கள் செலுத்தப்படாத நிலைமையும் தொடர்ந்து கொண்டே இருப்பதையும் காண்கின்றோம். தொழில் இடங்களில் அவர்கள் பல்வேறு இடையூறுகளுக்கு உட்படுகின்றனர். ஊதிய ரீதியில் இன்னமும் மிகவும் பின்தள்ளப்பட்டே வைக்கப்பட்டுள்ளனர்.

தோட்டத் தொழிலாளர்களின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளை பல்வேறுபட்ட வடிவங்களில் ஆராய்வது, தொழில் பற்றாக்குறையை தவிர்த்தல், தொழில் வினைத் திறனை மேம்படுத்தல், கல்வி ஒத்துழைப்பு தொடர்பில் ஒப்பந்தம் ஒன்று மிச்சிகன் ஆiஉhபையn   பல்கலைகழகத்திற்கும் இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுகத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட இருந்ததாக கடந்த வருடத்தில் அறியக் கிடைத்திருந்தது. அதன் இன்றைய நிலை என்ன என்பது பற்றி அறிய விரும்புகின்றேன்.

குறிப்பாக, தோட்டத் தொழிலாள மக்களின் வாழ்க்கை நிலை மேமப்படுத்தப்பட்டால், அவர்களது சமூக, பொருளாதார நிலை மேம்படுத்தப்பட்டால், வினைத் திறன் ரீதியில் அவர்களது உழைப்பினை மேலும் பெற இயலும் என நினைக்கின்றேன். 50 ரூபா ஊதிய அதிகரிப்பொன்று அவர்களுக்கு வழங்கப்படுவதாகக் கூறப்பட்டது. இன்று அதைப் பற்றி எந்தக் கதையுமே கிடையாது.

இன்றும் கூட குழவி கொட்டுகள் உள்ளிட்ட பல்வேறு மிருகங்களின் அச்சுறுத்தல் நிலைமைகளுக்கு மத்தியில் தொழில் செய்கின்ற நிலையிலிருந்து அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டிய சூழலை ஏற்படுத்துவது அவசியமாகின்றது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அதேநேரம், தொடர்ந்தும் தேயிலையை வெறும் மூலப் பொருளாகவே ஏற்றுமதி செய்து கொண்டிருக்காமல், பெறுமதி சேர்க்கப்பட்ட பொருளாக ஏற்றுமதி செய்வதற்கான ஏற்பாடுகள் தேவை என்தையும் அவதானத்தில் கொள்ள வேண்டும். அதாவது, ‘உடனடி தேநீர்’ தொடர்பில் உலகில் பாரிய கேள்விகள் இருப்பதாகவே தெரிய வருகின்றது.

தேயிலை ஏற்றுமதியில் இன்று நாம் பல நாடுகளுடன் போட்டிப் போட வேண்டியுள்ளது. அதற்கேற்பவே எமது உற்பத்தியின் தரத்தினை மேம்படுத்துவதற்கும், பெறுமதி சேர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அயலக இந்தியாவைப் பொறுத்த வரையில், தேயிலையுடன் பல்வேறு மருத்துவப் பொருட்கள் சேர்க்கப்பட்ட ஆரோக்கிய பானங்கள் தயாரிக்கப்பட்டு, சந்தையிலே பிரபலமாகியுள்ளன. இலங்கையில்கூட ஒரு சில தனியார்த் துறையினர் இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்ற போதிலும், அதற்கான ஊக்குவிப்புகள் மற்றும் கண்காணிப்புகள் என்பன தொடர்ந்தும் வழங்கப்பட வேண்டும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

தற்போதுகூட இந்த நாட்டின் தேயிலைக் கைத் தொழிலானது முழுமையாகவே தனியார் நிறுவனங்கள் மற்றும் ஏலம் விடுவோர் போன்ற அரசுக்கு அப்பாற்பட்ட துறையினரின் மூலமாகவே கையாளப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்ற நிலையில், இதில் உடனடி  மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும். அத்தகையதொரு நிலை வரும்வரையில், இலங்கைத் தேயிலையின் தரம் தொடர்பில் உறுதியிட முடியாத நிலை தொடர்வதைத் தவிர்க்க முடியாது என்பதையும் வலியுறுத்துகின்றேன்.

Related posts:


பாதிக்கப்பட்டவர்களை மேலும் பாதிக்க விடுவதா - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேள்வி!
புலம்பெயர் உறவுகள் தமது பூர்வீக பிரதேசங்களின் மேம்பாட்டிற்கு உதவவேண்டும் - டக்ளஸ் தேவானந்தா!
எம்மால் முன்னெடுக்கப்பட்ட பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவேண்டும் என்பதையே மக்கள் விரும்புகிறார்...