இரணைமடுக் குளத்தில் முதற் கட்டமாக ஒரு லட்சம் மீன் குஞ்சுகள் – கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு பிரதேச மக்கள் நன்றி தெரிவிப்பு!

Saturday, January 18th, 2020


கிளிநொச்சி, இரணைமடுக் குளத்தின் மீனவர் இறங்குதுறைகளில் ஒன்றான சாந்தபுரம் கிராம இறங்கு துறையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முதற்கட்டமாக சுமார் ஒரு லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்திற்கான விஜயத்தினை இன்று(19.01.2020) மேற்கொண்ட கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்> தேசிய நீர்வாழ் அபிவிருத்தி அதிகார சபையின்(நக்டா) நிதி ஒதுக்கீட்டடில் மேற்கொள்ளப்பட்ட குறித்த திட்டத்தின் முதற் கட்டத்தில் கலந்து கொண்டு மீன் குஞ்சுகளை குளத்தில் விடும் செயற்பாட்டை ஆரம்பித்து வைத்தார்.

கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி சாந்தபுரம் பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் பிரதேச மக்களினால் இரணைதீவு குளத்தில் ஆண்டுதோறும் விடப்படும் மீன்களின் தொகையை அதிகரிக்குமாறும் அவை வைப்பிலிடப்படும் காலப்பகுதியை விரைவுபடுத்துமாறும் கோரிக்கை முன்வைத்தனர்.

அதுதொடர்பாக கவனம் செலுத்திய அமைச்சர் அவர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கிய ஆலோசனைகளின் அடிப்படையில் இன்றைய தினம் குறித்த மீன்குஞ்சுகள் விடும் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்பேர்து, தாங்கள் முன்வைத்த கோரிக்கை தொடர்பாக கவனம் செலுத்தியது மட்டுமன்றி நேரடியாக வருகை தந்து அதனை நிறைவேற்றித் தந்தமைக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு பிரதேச மக்கள் தமது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

சுமார் மூன்று மாதங்களில் அறுவடைக்கு தயாராகுமென எதிர்பாரக்கப்படும் குறித்த மீன்குஞ்சுகளின் மூலம் சுமார் 100 மெற்றிக்தொன் மீன் அறுவடையை பெற முடியும் எனவும் அவற்றை ஒரு கிலோகிராம் ரூ220 வீதம் விற்பனை செய்ய முடியும் எனவும் துறைசார்ந்தவர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, நன்னீர் மீன்பிடித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் வட மாகாணத்தில் அமைந்துள்ள சுமார் 40 நீர்நிலைகளில் 22,000 இறால் குஞ்சுகளை கொண்டு வந்து விடுவதற்கு தனியார் நிறுவனம் ஒன்று தயாராக இருகின்ற நிலையில் அதுதொடர்பான நடவடிக்கையை முன்னகர்த்தி விரைவுபடுத்துவது தொடர்பான ஆலோசனைகளும் அமைச்சர் அவர்களினால் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது.

அத்துடன், பிரமனந்தனாறு மற்றும் விஸ்வமடு நன்னீர் கிராமிய மீனவர் அமைப்புக்களுக்கு மீன்பிடிப் படகுகள் மற்றும் மீன் கூடுகள் போன்ற உபகரணங்களும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அறிவுறுத்தலின்படி தேசிய நிPர்வாழ் அபிவிருத்தி அதிகார சபையின் நிதி ஒதுக்கீட்டில் இ;ன்று வழங்கி வைக்கப்பட்டது.

அதேவேளை, கிளாலிப் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவனாந்தா அவர்கள், கிளாலி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்திற்கான பொது நோக்கு மண்டபத்தினையும் திறந்து வைத்தார்.

கடற்றொழில் மற்றும் நீரகவளத் திணைக்களத்தின் சுமார் 3.1மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்டுள்ள குறித்த பொது நோக்கு மண்டபத்தினை மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு அதனை மக்களின் பாவனைக்கு கொடுத்தமைக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு நன்றி தெரிவித்த கிளாலிப் பிரதேச மக்கள்> தமது பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுகளை தடுத்து நிறுத்துமாறும் கோரிக்கை முன்வைத்தனர்.

அதுதொடர்பாக கவனம் செலுத்திய அமைச்சர் அவர்கள் உடனடியாக பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரியை அழைத்து தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அறிவுறுததியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தமிழ்த் தேசிய இனத்தின் அனைத்து உரிமைகளுக்கும் தீர்வு காணும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துங்கள் –நாடாள...
அடைய முடியாத இலக்கை விடுத்து இணக்க அரசியலுடன் கைகோருங்கள்: பருத்திதுறையில் அமைச்சர் டக்ளஸ் அறைகூவல்!
ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் வடக்கு கிழக்கு புறக்கணிக்கப்படாது – அமைச்சர் டக்ளிஸிடம் ஜனாதிபதி கோட்டாப...