அமரர் கணேசலிங்கத்தின் (தோழர் மாம்பழம்) பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!
 Friday, August 30th, 2019
        
                    Friday, August 30th, 2019
            
அமரர் இரத்தினம் கணேசலிங்கம் (தோழர் மாம்பழம்) அவர்களின் புதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தீவிர செயற்பாட்டாளராக செயற்பட்டுவந்த அமரர் இரத்தினம் கணேசலிங்கம் கட்சியின் அல்வாய் வடக்கு வட்டாரச் செயலரும் பிரதேச நிர்வாக உறுப்பினருமான தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருந்த நிலையில் சிறிது காலமாக உடல் நலக் குறைவுக்கு ஆளாகியிருந்த நிலையில் கடந்த 28.08.2019 அன்று காலமானார்.
இந்நிலையில் அல்வாயில் உள்ள அன்னாரது இல்லத்திற்கு இன்றையதினம் சென்ற செயலாளர் நாயகம் அவரது பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்னன் கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து அஞ்சலி மரியாதை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        