வீதி திருத்த அறிவிப்புகள் மும்மொழிகளிலும் காட்சிப்படுத்தப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!
Wednesday, February 8th, 2017
வீதி திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்ற பல்வேறு பகுதிகளில், பல்வேறு சந்தர்ப்பங்களில் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு கோரப்படும் அறிவிப்புகள் தனிச் சிங்கள மொழியினில் மாத்திரமே காட்சிப்படுத்தப்படுகின்றன.
குறிப்பாக, கொழும்பு போன்ற பிரதான நகரங்களிலும் இந்த நிலையைக் காணக்கூடியதாக இருக்கின்றது. சைகைகள் கூட இல்லாத இவ்வாறான சந்தர்ப்பங்களில் சிங்கள மொழி மூலப் பரிச்சயமற்றவர்களால் வீதி ஒழுங்கு மீறல்களுக்கான வாய்ப்புகள் ஏராளம்.
இது குறித்தும் சம்பந்தப்பட்டவர்கள் உரிய அவதானம் செலுத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts:
ஆணைக்குழுக்களின் உருவாக்கம் என்பது நாட்டின் முன்னேற்றம் கருதியதானதாக அமைய வேண்டும் - டக்ளஸ் தேவானந்த...
யுத்தகாலத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு விரையில் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் - அமைச்சர...
வடமராட்சியில் கடலட்டை பிடிக்க அனுமதி: அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!
|
|
|


