விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி – 10 வீத கழிவு முறைமையை இல்லாதொழிக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

……..
யாழ் மாவட்டத்தினை சேர்ந்த கமக்காரர் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று அமைச்சரின் யாழ் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இக்கலத்துரையாடலில், விவசாயிகளிடம் இருந்து சந்தை வியாபாரிகளினால் அறவிடப்படுகின்ற விவசாய உற்பத்திகளின் ஒவ்வொரு 10 கிலோவிற்கும் ஒரு கிலோகிராம் கழிவு முறைமையினை இல்லாமல் செய்வது உட்பட பல்வேறு விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டன.
விவசாயிகளின் ஆதங்கங்களையும் எதிர்பார்ப்புக்களையும் கேட்டறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விவசாயிகளுக்கும் மக்களுக்கும் நியாயமான விலை கிடைக்கும் வகையில் சந்தை செயற்பாடுகளை ஒழுங்கமைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார். – 14.07.2023
Related posts:
எமது கட்சியின் வெற்றி என்பது நிச்சயம் எமது மக்களின் வெற்றியாக அமையும் - பண்டத்தரிப்பில் டக்ளஸ் தேவான...
மக்கள் தமது தொழில் துறைகளை நிம்மதியாக முன்னெடுக்க என்றும் நாம் துணையிருப்போம் - செயலாளர் நாயகம் டக்ள...
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்த யாழ் பல்கலைக்கழக ஊழியர்க...
|
|