விருப்பினார் டக்ளஸ் – நிறைவேற்றினார் ஜனாதிபதி – தலைநகரில் பறக்கிறது தமிழர் கொடி!

Monday, October 24th, 2022


இந்துக்களின் புனித நிகழ்வுகளில்  ஒன்றான தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையிலான அனைத்து ஏற்பாடுகளும்  ஜனாதிபதி செயலகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் ஜனாதிபதி செயலக வளாகத்தில் நந்திக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன், மின் விளக்குகளினாலும் ஜனாதிபதி மாளிகை அலங்கரிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற இந்துக்களின் பூஜை வழிபாடுகளில் ஒன்றான நவராத்திரி விழா, ஜனாதிபதி மாளிகையில் ஏற்பாடு செய்யப்படாமை தொடர்பாக இந்து மதம் சார்ந்தவர்களினால், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அதுதொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துச் சென்றிருந்ததுடன், தீபாவளிப் பண்டிகையை ஜனாதிபதி மாளிகையில் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. – 24.10.202

Related posts:

நோயாளிகளைப் பார்க்க வருகின்றவர்களை கட்டுப்படுத்த வேண்டிய நிலைக்கு யாழ் போதனா வைத்தியசாலை தள்ளப்பட்டு...
வடக்கில் பாரிய அபிவிருத்தி - ஆசிய அபிவிருத்தி வங்கி அதிகாரிகளிடம் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!
யாழ். போதனா வைத்தியசாலை விவகாரங்கள் அமைச்சரவையில் பிரஸ்தாபிக்கப்படும் - அமைச்சர் டக்ளஸ் உறுதி!