விடுமுறை நாட்களிலும் முழு ஈடுபாட்டுடன் வேலை செய்யும் கெளரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிரதி அமைச்சராக இருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன் – பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவிப்பு!

Friday, November 9th, 2018

விடுமுறை நாட்களிலும் முழு ஈடுபாட்டுடன் வேலை செய்யும் அமைச்சரான கெளரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் அவரின் பிரதி அமைச்சராக இருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன் என மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்

இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட செயலாகத்தில் யுத்தம் மற்றும் வன்செயல்கள் காரணமாக பல்வேறு இழப்புக்களைச் சந்தித்த மக்களின் ஒரு தொகுதியினருக்கு இழப்பீட்டுக் கொடுப்பனவுகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

கடும் யுத்தம் காரணமாக பல்வேறு துன்ப துயரங்களை எதிர்கொண்டுவரும் மக்களின் பிரச்சினைகளுக்கு நேர்மையான முறையில் ஆறுதல் கொடுக்கும் சிறந்த ஒரு மனிதராக விளங்குபவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. அந்தவகையில் அவருக்கு குறித்த வடக்கின் அபிவிருத்தி அமைச்சு வழங்கப்பட்டுள்ளமையானது அவலப்பட்டு வாழும் எமது மக்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ள ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்துள்ளது.

அந்தகைய மனிதநேயம் மிக்க மக்களை இதயபூர்வமாக நேசிக்கின்ற ஒரு அமைச்சரின் பிரதி அமைச்சராக இருப்பதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.

அந்தவகையில் எமது மக்களின் பிரச்சினைகள் எவ்வளவுக்கு எவ்வளவு தூரம் விரைவாக தீர்வு கண்டு கொண்டுக முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு விரைவாக பரிகாரங்களை பெற்றுக்கொடுத்து எமது மக்களின் வாழ்வியல் நிலை புத்தொழிபெற கடுமையாக  உழைக்கத் தயாராக இருக்கின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

0000

08

Related posts: