யானையின் வருகையால் பெரும் அச்சத்தில் மக்கள் – நடவடிக்கை எடுக்கிறார் அமைச்சர் டக்ளஸ்!

Wednesday, July 8th, 2020

காட்டு யானைகளின் பாதிப்புக்களின் தாக்கம் நாளாந்தம் அதிகரித்துச் செல்வதால் மக்கள் பல்வேறு அவலங்களையும் இழப்புக்களையும் சந்தித்துவரும் நிலையில் அதற்கான தீர்வுகளைப் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மக்களின் குடியிருப்புக்களுக்குள் காட்டு யானைகள் தொடர்ந்தும் உள் நுழைந்து பயிர்களை அழித்து வருவதோடு, வீடுகளுக்கும் சேதம் ஏற்படுத்திவரும் நிலை தொடர்கின்றது. அதுமட்டுமல்லாது அண்மைய காலங்களில் தினமும் யானையின் அச்சம் மக்களிடையே அதிகரித்து வருகிறது.

எனவே இது தொடர்பில் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் இன்றையதினம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை பரிசிலித்த அமைச்சரவை அதற்கு தீர்வுகாண நுண்ஒலி அலைவரிசைகளை நிறுவி மக்கள் குடியிருப்புக்களை நோக்கி யானைகள் வருவதை கட்டுப்படுத்தும் முறையை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதுது.

அந்தவகையில் இனிவரும் காலங்களில் குறித்த யானைத்தொல்லையிலிருந்து மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: