வாக்குறுதிகள் தொடர்ந்தும் கானல் நீராகின்றது – டக்ளஸ் தேவானந்தா!

Monday, December 19th, 2016

சுயலாப அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள் தொடர்ந்தும் கானல்நீராகி வருகின்றன என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் மாவட்ட ஊடகப்பிரிவு மண்டபத்தை இன்றையதினம் அங்குரார்ப்பணம் செய்து வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதிய அரசியலமைப்பு விடயம் தொடர்பில் சரியான யதார்த்த வழி முறையிலான கருத்து நிலைப்பாட்டையே நாம் கொண்டுள்ளோம். அந்த வகையில்தான் புதிய அரசியலமைப்பு விடயம் தொடர்பிலும் எமது கட்சி தெளிவான ஒரு நிலைப்பாட்டையே கொண்டுள்ளது.

2016ஆம் ஆண்டு நடுப்பகுதியில் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கூறியிருந்தனர். பின்னர் ஆண்டின் இறுதியில் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று கூறிவந்த இவர்கள் இன்று 2017ஆம் ஆண்டு தீபாவளிக்கு தீர்வு வருமென கூறி வருகின்றார்கள்.

தேர்தல் காலங்களில் மக்களின் வாக்குகளை அபகரிக்கும் நோக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மக்களை தொடர்;ச்சியாக ஏமாற்றி வருகின்றனர். அரசுடன் ஏற்கனவே தாம் பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளதாக கூறிவருகின்ற கூட்டமைப்பினர் என்ன விடயங்கள் தொடர்பாக அரசுடன் கந்துரையாடியுள்ளதாக இதுவரை தெளிவுபடுத்தாததன் காரணம் என்ன? எனக் கேள்வி எழுப்பினார்.

புலிகளின் பிரச்சினைகள் வேறு தமிழ் மக்களின் பிரச்சினைகள் வேறு என்று நாம் கூறியபோது  எம்மை துரோகிகள் எனக்கூறினார்கள். இந்நிலையில் ஈ.பி.டி.பி.யை தவிர ஏனைய தமிழ் அரசியல் கட்சிகள் புலிகளினதும் தமிழ் மக்களினதும் பிரச்சினை ஒன்றென கூறினார்கள்.  இந்நிலையில் சுயலாப அரசியல்வாதிகள் தமது சுயலாபங்களை கருத்திற்கொண்டு நிறைவேற்றப்பட முடியாத வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கி தேர்தல்களில் வெற்றி பெருகின்ற போதிலும் அவர்கள் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகள் கானல்நீராகி வருகின்றன என்றும் சுட்டிக்காட்டினார்.

குறித்த ஊடக சந்திப்பின்போது  கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) மற்றும் கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1288078558dukku-L

Related posts:

யாழ்ப்பாணத்தில் “சுபீட்சத்தின் நோக்கு” திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
பேலியகொடை மீன் சந்தைக்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம் - கழிவகற்றல் செயற்பாடுகள் தொடர்பில் அவதானம்!
சுழியோடி முறையை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவோர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையா...