வவுனியா, போகஸ்வெவ கிராமத்தில் அமைச்சர் டக்ளஸிற்கு அமோக வரவேற்பு!
Sunday, June 21st, 2020
வவுனியா, போகஸ்வெவ பிரதேச மக்களினால் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தவிற்கு ஆமோக வரவேற்பளிக்கப்பட்டதோடு பல்வேறு கோரிக்கைளும் முன்வைக்கப்பட்டன.
சந்தஸ்ரீ ரஜமஹா விகாரை முன்றலில் இன்று நடைபெற்ற குறித்த வரவேற்பு நிகழ்வில் விகாராதிபதி பலகல்லே சுமனதிஸ்ஸ தேரர் அமைச்சருக்கு ஆசி வழங்கியதோடு அமைச்சரின கடந்த கால செயற்பாடுகளும் மக்கள் நலன்சார் வேலைத் திட்டங்களும் அனைவருக்கும் முன்மாதிரியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், பிரதேச மக்களினால் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துக் கூறப்பட்டது.
அந்தவகையில், போக்குவரத்துப் பிரச்சினைகள், மருத்துவமனை, வேலை வாய்ப்பு, குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுத் தருமாறும் கோரிக்கை முன்வைத்தனர்.
குறித்த கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்த அமைச்சர் அவர்கள், சிறிய மருத்துவ நிலையம் ஒன்றை உடனடியாக அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதுடன் பல நோக்கு கூட்டுறவுச் சங்க கிளை ஒன்றினை அமைப்பதறகும் நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.
அத்துடன் மின்சாரம், குடிநீர் பிரச்சினை போன்றவற்றுக்கான தீர்வு தொர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுன் தொடர்பு கொண்டு உரையாடிய அமைச்சர் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய அறிவுறுத்தல்களையும் வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|





