வவுனியா தரணிக்குளம் கிராமத்தில் டக்ளஸ் எம்.பி. தலைமையில் மரநடுகை விழா!
Saturday, September 21st, 2019
வவுனியா மாவட்டத்தின் தரணிக் குளம் பகுதியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் மரநடுகை திட்டமொன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.
தரணிக்குளத்தில் வசிக்கும் கிருஸ்ணகுமார் என்ற சிறுவனின், மரம் நடுகையை ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணக்கருவுக்கு, வலுச்சேர்க்கும் முகமாகசெயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட உறுப்பினர்களின் வழிநடத்தலில் இடம்பெற்ற, குறித்த நிகழ்வில் மரக்கன்றுகள் நாட்டிவைக்கப்பட்டதோடு தரணிதீபம் விளையாட்டுக் கழத்துக்கான மைதானமும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக செயலாளர் திலீபன் கட்சியின் உள்ளிட்ட கட்சியின் மக்கியஸ்தர்களுடன் செயற்பாட்டாளர்கள் மற்றும் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related posts:
|
|
|


