வளிமண்டலத் திணைக்களத்தால் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகின்றதா – நாடாளுமன்றில் டக்ளஸ் எம். பி. கேள்வி!

Thursday, December 7th, 2017

காலநிலை சீர்கேடுகளால் ஏற்படும் கடும் காற்று கடும் மழை காரணமாக அனர்த்த நிலைமைகள் ஏற்பட்டு வருகின்றதொரு நிலையில் இவை தொடர்பிலான முன்னறிவித்தல்கள் சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளிலேயே வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்பட்டு வருவதுடன் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவது ஏன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கௌரவ அனுர பிரியதர்சன யாப்பா அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

வளிமண்டளவியல் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தை எடுத்துக் கொண்டாலும் இதே நிலைமையே காணப்படுகின்றது. ‘வளிமண்டலவியல் திணைக்களம் – இலங்கை’ என்ற தமிழ் மொழியிலான தலைப்பே எழுத்துப் பிழைகளுடன் காணப்படுவதுடன் தொடர் பயன்பாடு இன்றியும் முன்னறிவித்தல்கள் இன்றியுமே காணப்படுகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களத்தில் இத்தகைய நிலைமை ஏற்பட தமிழ் தெரிந்த அதிகாரிகள் இன்மையே காரணம் எனக் கூறப்படுகின்றது. அதாவது இத்திணைக்களத்திற்கு குறைந்தபட்சம் தமிழ் தெரிந்த அதிகாரிகள் 4 பேராவது இருக்க வேண்டிய நிலையில் குறிப்பிட்ட கடமைக்காக ஒருவருமே இல்லை என்றே தெரிய வருகின்றது.

இத்தகைய நிலையினை மாற்றும் வகையில் வளிமண்டளவியல் திணைக்களத்திற்கு போதிய தமிழ் அதிகாரிகளை நியிமிப்பதற்கும் தமிழ் மொழி மூலமாக காலநிலை மாற்றங்கள்; தொடர்பில் உடனுக்குடன் முன்னறிவித்தல்களை வழங்குவதற்கும் மேற்படித் திணைக்களத்தின் தமிழ் மொழி மூலமான இணையத்தளத்தினை முறையாக செயற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க முடியுமா? என கௌரவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா அவர்களிடம் கேள்வி எழப்பியுள்ளார்.

Related posts:

அரசியல் தீர்வானது தமிழ் மக்களுக்கு ஏற்புடையதாக இருக்கவேண்டும் - சிவில் சமூகப் பிரதிநிதிகளிடம் டக்ளஸ்...
வடக்கில் செயலிழந்துள்ள பல்வேறு கைத்தொழில் முயற்சிகளை விரைவில் மீள ஆரம்பிக்க நடவடிக்கை – அமைச்சர் டக்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் முழுமையாக விகிதாசார முறையில் நடத்தப்பட வேண்டும் - தேர்தல் முறை மாற்றம்...