வளலாய் , உரும்பிராய் பகுதி மாதர் அமைப்புகள் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு!

Tuesday, April 25th, 2017

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை வலி.கிழக்கு வளலாய் வடக்கு மற்றும் உரும்பிராய் வடக்கு மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள் சந்தித்து தமது கிராமங்களின் அபிவிருத்தி தொடபாக கலந்துரையாடியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் இச்சந்திப்பு இடம்பெற்றது.

வளலாய் வடக்கு கிராமத்தில் இதுவரையில் மின் இணைப்பு வழங்கப்படாத வீடுகளுக்கு மின் இணைப்பு வசதிகளை ஏற்படுத்தல். குடிநீர் விநியோகத்திட்டம் முன்பள்ளிக் கட்டிடம் நிர்மாணிப்பதற்கான நிரந்தரமான காணியைப் பெற்றுக்கொள்ளல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதேபோன்று உரும்பிராய் வடக்கு மகளிர் அமைப்பு பிரதிநிதிகளும் கிராம மேம்பாடு தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக தெரியப்படுத்தினர். கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்திய டக்ளஸ் தேவானந்தா தேவைகளை ஆராய்ந்து முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காண்பதற்கு காலக்கிரமத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென தெரிவித்தார். இதன்போது கட்சியின் வலி.கிழக்கு பிரதேச நிர்வாகச் செயலாளர் இராமநாதன் ஐங்கரன் உடனிருந்தார்.

 

Related posts:

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் ஆயுதங்கள் மௌனித்திருக்க வேண்டும் - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவான...
மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கூடாக மக்கள் நலன்சார் விடயங்களுடன் அபிவிருத்திகளையும் அர...
கொரோனா தடுப்பூசி வேலைத் திட்டம் தொடர்பில் மதகுருமார் மகிழ்ச்சி - அமைச்சர் டக்ளஸிற்கு நன்றி தெரிவிப்ப...