வருத்தப்படாத வாலிபர் சங்க உள்ளக விளையாட்டு அரங்கை வினைத் திறனாக செயற்படுத்த கட்சி நிதியிலிருந்து விளையாட்டு உபகரணங்களை வழங்கிவைத்த அமைச்சர் டக்ளஸ்!

Saturday, May 11th, 2024

இளவாலை மக்கள் ஒன்றியத்தின் புலம்பெயர் நிதிப் பங்களிப்பில், இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்க நிர்வாகத்தினரால் அமைக்கப்பட்டுள்ள உள்ளக விளையாட்டு அரங்கினை வினைத் திறனாக செயற்படுத்துவதற்கான விளையாட்டு உபகரணங்கள் ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினரின் அழைப்பினையேற்று, நேற்று குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா, பிரதேச இளைஞர்களின்  எதிர்கார்ப்புகள் மற்றும்  தேவைகள்  தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

இந்நிலையில் இன்றையதினம் கட்சி நிதியின் மூலம் குறித்த விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


அரசு நல்லிணக்கத்தை வெளிப்படுத்த தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும் - டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!
வசாவிளான் குட்டியப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைய விளையாட்டு நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...
அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழக வளாகம் கிளிநொச்சி பல்கலைக் கழகமாக பரிணமிக்க வேண்டும் - ...