வரலாற்று சிறப்பு மிக்க யாழ் கோட்டையின் நிலைமைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க நேரில் சென்று ஆராய்வு!

Saturday, November 6th, 2021

யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளங்களுள் ஒன்றாக விளங்கும் யாழ் கோட்டையினை கடற்றொழில் அமைச்சருடன் இணைந்து, யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க பார்வையிட்டார்.

இதன்போது,  யுத்த காலத்தில் அழிக்கப்பட்ட யாழ் கோட்டை புனரமைக்கப்பட்டமைக்கான நோக்கம் மற்றும் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்காவிற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துரைத்தார்.

அத்துடன்,  கோட்டை தொல்பொருள் திணைக்களத்தில்  ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 37 ஊழியர்கள் தமது நிரந்தர நியமனம் தொடர்பாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவுடன் சந்திப்பினை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது

Related posts:

தேசிய பாதுகாப்பும் தேசிய நல்லிணக்கமும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் - டக்ளஸ் எம்.பி. வலியுறு...
திருக்கேதீச்சர ஆலயத்தின் பாரம்பரியங்களையும் மகிமையையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுதருங்கள் ...
வடமராட்சி கிழக்கு ஆசிரியர்களின் இடமாற்றம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் இடைநிறுத்தம்!