வரலாற்றுப் பாடநூல்களில் தமிழர் வரலாறுகள் புறக்கணிக்கப்ப டுகின்றன டக்ளஸ் தேவானந்தா பா.உ ஜனாதிபதிக்கு கடிதம்.
Monday, September 18th, 2017
எமது நாட்டின் தமிழ் மூலப் பாடநூல்களைப் பொறுத்தவரையில், குறிப்பாக வரலாற்றுப் பாட நூல்களில் கடந்த காலங்களிலிருந்து தமிழர் வரலாறானது தொடர்ந்தும் திரிபுபடுத்தல்களுக்கும், மூடிமறைப்புக்களுக்கும், புறக்கணிப் புக்களுக்கும் உட்படுத்தப்பட்டு வருகின்றது. இந் நிலைமைகள் அகற்றப்பட்டு நாட்டின் உண்மையான வரலாற்றை எமது மாணாக்கருக்கு கற்பிக்க வேண்டியது முக்கியமாகும் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ் மூல வரலாற்றுப் பாடநூல்களில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள், குறைபாடுகள் தொடர்பில் சுட்டிக்காட்டி ஜனாதிபதி மைத்திரிபால, பிரதமர் ரணில் விக்ரம சிங்க, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், இராஜாங்க கல்வி அமைச்சர் வெ. ராதாகிருஷ;ணன் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அந்தக் கடிதத்தில் புத்தகங்களில் உள்ள குறைபாடுகளையும், அவற்றை நிவர்த்தி செய்வதற்கான பரிந்துரைகளையும் துறைசார்ந்த தமிழ் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோரைக்கொண்டமைந்த குழு ஒன்றின் ஆலோசனைகள், பரிந்துறைகளை என்பவற்றைத் திரட்டித் தயாரிக்கப்பட்ட ஆவனச் சுருக்கத்தை இணைப்பாக அக்கடிதத்துடன் அனுப்பிவைத்துள்ளார்.
அதாவது வரலாற்றைக் கற்பிப்பதற்கான – கற்பதற்கான முக்கிய நோக்கம் வரலாறு தந்த பாடங்களை அவை துன்பகரமானதாக இருக்கலாம், சாதனை நிறைந்ததாக இருக்கலாம், ஒற்றுமையான நிகழ்வுகளை குறிப்பதாக இருக்கலாம் அந்த வரலாற்றை ஒரு இனத்திற்கு வாய்ப்பாக திரிபுபடுத்தக் கூடாது. உண்மையான வரலாறு தெரியவரும்போதுதான், நாட்டு மக்கள் மத்தியில் ஒற்றுமையையும் தேசப் பற்றையும் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்வையும் வளர்த்தெடுக்கமுடியும்.
இது தொடர்பாக நான் நாடாளுமன்றத்தில் பலதடவைகள் கேள்வி எழுப்பியதும் பின்னர் கல்வி அமைச்சரது அனுசரணையுடன் இராஜாங்க அமைச்சரின் தலைமையில் தேசிய கல்வி நிறுவக பிரதிநிதிகள், கல்வி வெளியீட்டுத் திணைக்கள பிரதிநிதிகள், பரீட்சைத் திணைக்கள பிரதிநிதிகள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்ளடங்கலாக ஒன்றுக்கு மேற்பட்ட கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு பொது இணக்கம் காணப்பட்டு வருங்காலத்தில் இத் தவறுகள் சீர்செய்யப்படும் என்பதை ஏற்றுக்கொண்டதையும் இங்கு நான் குறிப்பிட விரும்புகின்றேன்.
தமிழ் மாணவர்களுக்கான வரலாற்றுப் பாட நூல்களில் சிங்கள பௌத்த மக்களின் வரலாறு தொடர்பான விடயங்களே மிகக் கூடுதலான அளவில் இணைக்கப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்லாமல் ஏனைய சமூகங்களின் உண்மையான பங்களிப்புக்கள், நிகழ்வுகளுக்கு உரியவாறு இடம் கொடுக்கப்படவில்லை. முகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எமது வரலாற்று நிகழ்வுகளுக்குக்கூட முக்கியத்துவம் வழங்காது புறக்கணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இன நல்லிணக்கம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற உயர் விழுமியங்களை முன்னெடுக்கின்ற காலகட்டத்தில் இந்நாட்டினுடைய வரலாறு பிழையாகவும் திரிபுபடுத்தப்பட்டும் மறைக்கப்பட்டும் உள்ள நிலைமைகள் சீர்செய்யப்படுமாகவிருந்தால் மாணவர்கள் நாட்டின் வரலாற்றை விஞ்ஞான ரீதியாகக் கற்பதுடன் உண்மைத்தன்மையையும் அறிந்து கொள்வார்கள் என்றும் செயலாளர் நாயகம் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய உடனடி நடவடிக்கை தேவை-டக்ளஸ்தேவானந்தா வெளிநாட்டலுவல்கள் அமைச்சருக்குத்...
ஜனாதிபதியின் நடைமுறை சாத்தியமான முன்னெடுப்புகளுக்கு தமிழ் மக்கள் ஒருமித்து ஆதரவு வழங்க வேண்டும் -...
புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் பிரதம அதித...
|
|
|
முல்லைத்தீவில் தொடரும் மர்மக் காய்ச்சல் தொடர்பில் தடுப்பு ஏற்பாடுகள் அவசியம் - டக்ளஸ் தேவானந்தா சுகா...
மக்களது எதிர்கால நலன்களை முன்னிறுத்தியதாகவே ஒவ்வொருவரது செயற்பாடுகளும் அமையவேண்டும் - தோழர்கள் மத்தி...
இழந்த தமது செல்வாக்கை மீண்டும் தூக்கி நிறுத்தவே கம்பரலிய, சமுர்த்தியை தூக்கிப் பிடிக்கிறது கூட்டமைப்...


