வரட்சி நிவாரணங்கள் வழங்கப்படுவதில் பாரபட்சங்கள் வேண்டாம் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Tuesday, November 28th, 2017

வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வரட்சி நிவாரணங்கள் வழங்கப்படுவதில் பாரபட்சங்கள் காட்டப்படுவதாக மன்னார், சாந்திபுரம் கிராம மக்கள் கடந்த 14ஆம் திகதி அப்பகுதியில் ஒரு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். இங்கு மட்டுமல்லாது, மேலும் சில பகுதிகளிலும் இத்தகைய பாரபட்சங்கள் காட்டப்பட்டு வருவதாகவே ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் – என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிததுள்ளார்.

இன்றைய தினம் அனர்த்த முகாமைத்துவம், துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை, தொழில், தொழில் உறவுகள் மற்றும் சப்பிரகமுவ அபிவிருத்தி ஆகிய அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

எமது நாட்டில் நிலவுகின்ற வரட்சி காலநிலை காரணமாக 13 மாவட்டங்களில் ஒரு இலட்சத்து 92 ஆயிரத்து 699 குடும்பங்களைச் சேர்ந்த 6 இலட்சத்து 40 ஆயிரத்து 465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிய வருகின்றது. இதில் குறிப்பாக, புத்தளம், குருனாகல், இரத்தினபுரி, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, மொனராகலை, திருகோணமலை, அம்பாறை போன்ற மாவட்டங்களிலேயே அதிகளவிலான மக்கள் பாதிப்புகளுக்கு அதிகம் முகங்கொடுத்துள்ளனர் என்றும் தெரிய வருகின்றது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவு வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற நிலையில், இத்தகைய பாதிப்புகளுக்கு உட்பட்டவர்களுக்கான வரட்சி நிவாரணங்கள் எதுவும் இதுவரையில் வழங்கப்பட்டுள்ளனவா? என்பது தொடர்பில் கௌரவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா அவர்கள் தனது உரையில் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

Related posts:


மாகாண சபை முறைமையினை எதிர்ப்பவர்கள் மாகாண சபை முறைமைக்குள் வந்திருக்கக் கூடாது - நாடாளுமன்றில் செயலா...
நியாயமற்ற வகையில் தமக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது – அமைசர் டக்ளஸ் தேவானந்தாவி...
பனை தென்னைவள உற்பத்திகளை பதனிட்டு போத்தலில் அடைத்து விற்பனை செய்வதற்கான அனுமதியை பெற்றுக் கொடுக்க அ...