வத்திராயன் கடல் பிரதேசத்தில் காணாமல்போன கடற்றொழிலாளர் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் அவதானம் – குடும்பத்தினருக்கும் ஆறுதல்!

Monday, January 31st, 2022

வத்திராயன் கடல் பிரதேசத்தில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்ற இரண்டு கடற்றொழிலாளர்கள் காணாமல் போயுள்ள நிலையில், குறித்த இடத்திற்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பவம் தொடர்பாக கேட்டறிந்திருந்தார்.

முன்பதாக கடந்த 27 ஆம் திகதி மாலை 4 மணியளவில் கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்களும் அவர்கள் பயணித்த படகும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

அதேவேளை, காணாமல் போன கடற்றொழிலாளர்களினால், சம்மந்தப்பட்ட கடற்றொழிலாளர்களினால் எடுத்துச் செல்லப்பட்ட வலைகள் அறுக்கப்பட்ட நிலையில் கண்டெடுத்துள்ளனர்.

இந்நிலையில் காணாமல்போன கடற்றொழிலாளர்களின் வீட்டிற்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குடும்ப உறவுகளை இழந்து தவிக்கும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும்  இந்தியத் தரப்பினருடன் பேசியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே வெற்றிலைக்கேணியில் தனியார் முதலீட்டாளர் ஒருவர் இறால் பண்ணை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், குறித்த பகுதிக்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தனியார் முதலீடுகளை வரவேற்று உற்சாகப்படுத்த வேண்டும் என்று தெரிவித்ததுடன், இவ்வாறான முதலீடுகள் பிரதேச மக்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் என்பதுடன், எதிர்காலத்தில் பிரதேசத்தின் வளர்ச்சிக்கும் பங்களிப்பை வழங்கும் என்று  நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடகடல் நிறுவனத்தின் வலை உற்பத்தி தொழிற்சாலைக்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உற்பத்திச் செயற்பாடுகளை பார்வையிட்டதுடன் அன்றாடச் செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராய்ந்தறிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: