வட கடல் நிறுவனத்தின் யாழ். பிராந்திய பணியாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்!
Thursday, May 13th, 2021
வட கடல் நிறுவனத்தின் யாழ். பிராந்திய செயற்பாட்டு மையத்தின் பணியாளர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தாங்கள் எதிர்கொள்ளுகின்ற நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.
கடற்றொழில் அமைச்சின் அங்கமாக இருக்கி்ற வடகடல் நிறுவனத்தின் யாழ். செயற்பாடுகள் தொடர்பாகவும் பணியாளர்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாகவும் கேட்டறிந்த கடற்றொழில் அமைச்சர், குறித்த நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் தொலைபேசி ஊடாக கலந்துரையாடினார்.
மேலும், யாழ். பணியாளர்களின் பிரச்சினைகள் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக ஆராயந்து நடவடிக்கை மேற்கொள்வதாகவும் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
தமிழ் தரப்பினரிடம் ஜனாதிபதி ரணில் வெளிப்படுத்திய திட்டத்திற்கு பிரதமர் மோடி வரவேற்பு - அமைச்சர் டக்ள...
மகாஜனாவின் யதார்த்தமான எதிர்பார்ப்புக்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவேன் - அமைச்சர் டக்ளஸ் உறுதி!
நெடுந்தீவு திருலிங்கநாதபுரம் மீன்பிடி இறங்குதுறைக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்!
|
|
|


