வடமாராட்சி கிழக்கில் சட்டவிரோத மணல் அகழ்வை தடுப்பதற்கு மேலதிக சோதனைச் சாவடிகள் – நேரடியாக சென்று நான்கு இடங்களை அடையாளப்படுத்திய அமைச்சர் டக்ளஸ்!

Friday, October 27th, 2023

வடமாராட்சி கிழக்கு பகுதியில் இடம்பெற்று வருகின்ற சட்ட விரோத மணல் அகழ்வினை தடுப்பதற்கு மேலதிகமாக சோதனைச் சாவடிகள் அமைப்பதுற்கு பொருத்தமான இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், வடமாராட்சி கிழக்கில் சட்ட விரோத மணல் அகழ்வினை தடுப்பதற்கு மேலதிகமான சோதனை சாவடிகள் அமைக்கப்பட ணே்டும் என்ற வேண்டுகோள் அரச அதிகாரிகளினால் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில், சம்ந்தப்பட்ட பகுதிக்கு நேரடியாக சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சட்டவிரோத மணல் எடுத்துச் செல்லப்படுவதற்கு சாத்தியமான வீதிகளை ஆராயந்து முக்கிய நான்கு இடங்களில் சோதனை சாவடிகளை அமைப்பதற்கான ஆலோசனைகளை  பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கியதுடன், தேவையேற்படின் விசேட அதிரடிப் படையினரின் ஒத்துழைப்புக்களையும் பெற்று, நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

ஜனாதிபதியின் விஷேட புத்தாண்டு கொண்டாட்டத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்றுச் சிறப்பிப்...
ஒலுவில் துறைமுகத்தின் மூலம் அம்பாறைக்கு வளமான எதிர்காலம் உருவாக்கப்படும் - அமைச்சர் டக்ளஸ் உறுதி!
அரசியல் கண்ணாடிகளை கழற்றிவிட்டு நிஜங்களை பார்ப்பதற்கு முன்வாருங்கள் - அரசியல் தலைவர்களுக்கு அமைச்சர்...