வடமராட்சி பகுதி கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் துவானந்தா களஆராய்வு!

Friday, December 25th, 2020

பருத்தித்துறை, கொட்டடிப் பிரதேசத்தில் உள்ள கடலணைகள் மற்றும் படகுகள் பயணிக்கும் வான் பகுதிகள் அண்மையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கபபட்டன.

இந்நிலையில், குறித்த பிரதேசத்திற்கான விஜயத்தினை இன்றையதினம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அப்பகுதியின் நிலைமைகள் தொடர்பில் பார்வையிட்டதுடன் அது தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையுள்ளார்.

இதனிடையே பருத்தித்துறை முனைப் பிரதேசத்தில் வெளிச்ச வீட்டை அண்மித்த பகுதிகளில் கற்றொழிலாளர்கள் வாடி அமைத்து தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அனுமதியைப் துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடிப் பெற்றுத் தருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேசத்தில் வாடி அமைப்பதற்கு கடலோர பாதுகாப்புத் திணைக்களம் அனுமதி மறுத்துள்ள நிலையில், பிரதேச கடற்றொழிலாளர்கள் கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்திருந்தனர்.

இந்நிலையில், இன்று குறித்த பிரதேசத்திற்கு நேரடி விஜயம் மேற்கொண்டு நிலமைகளை ஆராயாந்த கடற்றொழில் அமைச்சரினால் குறித்த  அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்பதாக பருத்திதுறை தொம்மையப்பர் தேவாலயத்தில் நத்தார் தின வழிபாடுகளில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: