வடக்கில் துயரங்கள் தொடர்வதற்கு வடக்கு மாகாணசபையை பொறுப்பேற்றவர்களே காரணம் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் தெரிவிப்பு!

Thursday, June 21st, 2018

வட மாகாணத்தில் நோயாளர் வண்டிச் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றவர்களும் முதலுதவிச் சிகிச்கை அளிப்பதற்கான சான்றிதழ் தகமையைப் பெற்ற தாதியர்களும; ஏராளமான தொகையினர் வடமாகாணத்தில் இருக்கின்றபோதும் அங்கே வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சாரதிகளாகவும் சௌக்கிய ஊழியர்களாகவும் நியமிக்கப்படுவதால் அங்குள்ள தகுதியானவர்கள் பாதிக்கப்படுவதாக முறையிடுகின்றனர் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் 1990 சுவசெரிய மன்றத்தினை தாபிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; அதனோடு தொடர்புபட்ட அல்லது இடைநேர் விளைவான கருமங்களுக்கு ஏறப்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூல விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஊழியர் நியமனங்களில் இவ்வாறு நடைபெறும் குறைபாடுகளுக்கும் சேவைகளை மக்கள் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் கவலையீனங்களுக்கும் அதிகாரத் துஸ்பிரயோகங்களுக்கும் வடக்கு மாகாணத்தில் நேர்த்தியான அரசியல் வழிகாட்டல் இல்லாமையும் வடக்கு மாகாணசபையின் செயற்றின்மையும் பிரதான காரணமாக இருப்பதை மறுப்பதற்கில்லை.

வடக்கு மாகாணசபையை பொறுப்பேற்று நிர்வகிப்போர் அந்த மாகாணத்தின் கல்வி வீழ்ச்சிக்கும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப்போயிருப்பதற்கும் காரணமாக இருப்பதைப்போன்று, சுகாதார வசதிகள் உரியவாறு மக்களுக்கு கிடைக்காமல் அந்த மக்கள் தொடர்ந்து துயரங்களை அனுபவிப்பதற்கும் காரணமாக இருக்கின்றார்கள்.

30 வருடத்திற்கு மேலான யுத்தத்திற்கு முகம் கொடுத்த மக்கள் வடமாகாணத்தில் விN~டமான மருத்துவ உதவிகளை நாடி நிற்பவர்களாக வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை பெற்றுக்கொடுக்கவோ அவர்களுக்கு இவ்வாறான துரித நோயாளர் வண்டிச் சேவைகளை ஏற்படுத்திக்கொடுக்கவோ மாகாணசபையை பொறுப்பேற்றவர்கள் இதுவரை எதனையும் செய்யவில்லை.

முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தானே சுகாதார அமைச்சராக நியமித்தவர் அதிகாரத் து~;பிரயோகத்தைச் செய்திருப்பதாகவும் சுகாதார அமைச்சு செயற்திறனோடு செயலாற்றவில்லை என்றும், வைத்திய உபகரணங்கள் கொள்வனவு மற்றும் ஆளணி உள்வாங்கள் நடைமுறையிலும் மோசடிகள் இடம்பெற்றிருப்பதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அக்குற்றச்சாட்டுக்கள் மீதான விசாரணைகளை நடத்துவதாகவும் கூறியிருந்தார். அந்த விசாரணைகளின் முடிவாக சுகாதார அமைச்சரை பதவி நீக்கம் செய்வதாகவும் கூறியிருந்தார்.

ஆனால் நடைபெற்றதாக கூறப்பட்ட அதிகாரத் து~;பிரயோகங்களுக்கும் மோசடிகளுக்கும் முதமலமைச்சர் விக்கினேஸ்வரனால் பரிகாரம் காணப்பட்டதாகவோ தவறுக்கு உரியவாறான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவோ இதுவரை வடக்கு மக்கள் எதையும் அறியவில்லை.

இவ்வாறு முதலமைச்சரும், மாகாண அமைச்சர்களும் பொறுப்பற்று செயற்படுவதால் அதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு சில சுகாதார துறைசார் அதிகாரிகள் மக்களுக்கு சுகாதார வசதிகளை வழங்குவதில் அசமந்தமாகச் செயற்படுவதால் பலர் பாதிக்கப்படுவதாகவும் கூறுகின்றனர்.

Related posts: