வடக்கில் தபால்துறை சார் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.கோரிக்கை!

Wednesday, September 5th, 2018

வடக்கு மாகாணத்தில் தபால் துறை சார்நது இதுவரையில் நிரப்பப்படாத பல வெற்றிடங்கள் உண்டு. தொழில்வாய்ப்புகளின்றி பலர் வடக்கு மாகாணத்திலே இருக்கின்ற நிலையில் இவர்களைக் கொண்டு மேற்படி வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அஞ்சல் அலுவலக கட்டளைச் சட்டத்தின் கீழான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில் –

யாழ்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் பழைய வாகனங்களே பயன்பாட்டில் இருப்பதாகத் தெரிய வருகின்றது. அதேபோன்று மன்னார் அஞ்சல் அத்தியட்சகரின் வாகனமும் பழைமையானதாகவே இருப்பதாகக் கூறப்படுகின்றது. எனவே புதிய வாகனங்கள் வழங்குவது தொடர்பில் கௌரவ அமைச்சர் அவர்கள் அவதானமெடுக்க வேண்டும்.

எனவே இத்தகைய விடயங்கள் தொடர்பில் கௌரவ அமைச்சர் அவர்கள் உடனடி அவதானங்களைச் செலுத்தி உரிய நடவடிக்கைகளை எடுப்பார் என எதிர்பார்க்கின்றேன்.

மேலும் இந்த நாட்டில் தபால் சேவையினை தற்கால நவீன கேள்விகளுக்கேற்ப விஸ்தரித்து மேற்கொள்ளப்படுவதற்கு உரிய அனைத்து ஏற்பாடுகளையும் எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் பணியாளர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகளினதும் தொழில் ரீதியிலான பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றேன்.

Related posts:

கல்வித் துறை தனியார் மயப்படுத்தலை நோக்கி நகர்கின்றதா - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!
அழிவுகளில் இருந்து மக்களை மீட்டு சிறந்த வாழ்கை தரத்தினை ஏற்படுத்துவதே எமது நோக்கம் - வவுனியாவில் அ...
விசாரணைகள் தமக்கு திருப்தியளிக்கும் வகையில் அமையவில்லை - சிவபுரம் கிராம மக்களின் சமூகப் பிரதிநிதிகள்...