வடக்கில் தட்டுப்பாடற்ற சீனி விநியோகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Thursday, November 30th, 2023

வடக்கு மாகாணத்தில் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சீனி விநியோகத்தினை சீர்செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடக்கில் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு  மேற்கொள்வதற்கு போதியளவு சீனி இல்லாமல் இருப்பதாக  பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் வடக்கு மாகாணத்திற்கு பொறுப்பான பொது முகாமையாளரினால்,  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக, துறைசார் அமைச்சருடன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடிய நிலையில், மேலதிகமாக 100 மெற்றிக்தொன் சீனியை அனுப்புதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சீனியை வடக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற 48 பல நோக்கு கூட்டுறவு சங்கங்களின் ஊடாகவும் நியாயமான விலையில் மக்களுக்கு விநியோகிப்பது தொடர்பான ஆலோசனைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கி இருக்கின்றமை  குறிப்பிடத்தக்கது.

0000

Related posts:

தனியார்துறை ஊதிய உயர்வு வெறும் எழுத்து மூல ஆவணம்தானா? நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா
அரச அலுவலகங்களில் தகுதியான மொழி பெயர்ப்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி....
சிந்தன் தோழரின் புகழுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கட்சிக் கொடி போர்த்தி இறுதி அஞ்சலி மரியாதை!

வலி.வடக்கில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீட்டுத்திட்டப் பணிகளை டக்ளஸ் தேவானந்தா பார்வை!
நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மக்களது வாழ்வாதாரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்! - டக்ளஸ் தேவானந்தா...
மக்களின் நலன்களுக்காக நீதிமன்றம் செல்லாதவர்கள் சுயலாபங்களுக்காக நீதிமன்றம் சென்றுள்ளார்கள் – செயலாளர...