வடக்கில் கடற்படை தீவிர நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தலைமையில் தீர்மானம்!

Wednesday, May 12th, 2021

கடற்படை மற்றும் கடலோர காவற்படையின் முழுமையான ஒத்துழைப்புடன் வடக்கு கடல் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தடைசெய்யப்பட்ட தொழில்முறைகளை பூரணமாக கட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் அமைசசர் டக்ளஸ் தேவானந்தா தலைமையையில், அமைச்சரின் யாழ். காரியாலயத்தில் இன்று(12.05.2021) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், தடைசெய்யப்பட்ட தொழில் முறைகள் பயன்படுத்தப்படுவது அவதானிக்கப்படுமானால், 021 750 8055, 011 309 1815, 026 776 9100 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தகவல் தெரிவிக்குமாறும் கடற்றொழிலாளர்கள் கேட்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில், தடைசெய்ப்பட்ட தொழில் முறைகளான குளை போட்டு மீன் பிடித்தல், வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல், டயனமைற் பயன்படுத்தல், கலைவலை தொழிலுக்கு உழவு இயந்திரங்கள் பயன்படுத்தல் மற்றும் அனுமதி பெறாமல் சுருக்கு வலை தொழிலில ஈடுபடுதல் போன்ற தொழில் செயற்பாடுகளை வடக்கு கடல் பிரதேசத்தில் கட்டுப்படுத்துவதற்கான கடுமையான நடவடிக்ககளை மேற்கொள்வதற்கு இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts: