வடக்கில் எச்.ஐ.வி தொற்று நோயாளர்கள் தொடர்பான சிகிச்சைகளுக்கு நவீன தொழில்நுட்ப சாதனங்களின் தேவைப்பாடு அவசியம் !
Monday, December 4th, 2017
அத்துடன், எச். ஐ. வி தொற்றும் தற்போதைய நிலையில் எமது நாட்டுக்;கு சவால் விடுகின்ற ஒரு நோயாகவே இனங்காணப்பட்டு வருகின்றது. 1987ஆம் ஆண்டில் எமது நாட்டில் எச். ஐ. வி. தொற்றுக்கு இலக்கான முதலாவது நபர் இனங்காணப்பட்டதிலிருந்து, இந்த வருடம் கடந்த ஒக்டோம்பர் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் நாடளாவிய ரீதியில் 2,783 பேர் இத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும், இவர்களில் 82 பேர் சிறுவர்கள் என்றும், 450 பேர் இந் நோய் காரணமாக இதுவரையில் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிய வருகின்றது.
வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், இக்காலகட்டத்திற்குள் 35 பேர் எச். ஐ. வி. தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என்றும், இவர்களில் இதுவரையில் 06 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிய வருகின்றது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய தினம் சுகாதார போசணை சுதேச மருத்துவம் மற்றும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சு ஆகிய இரு அமைச்சுக்கள் தொடர்பான குழநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|
|


