வடக்கின் வீடமைப்பு தொடர்பில் துறைசார் தரப்பினருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Sunday, November 4th, 2018

நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கான மீள்குடியேற்றம் மற்றும் வீடமைப்பு உள்ளிட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பாக உள்நாட்டு, வெளிநாட்டு துறைசார் நிபுனர்களுடன் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு,வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.

அமைச்சின் அலுவலகத்தில் குறித்த துறைசார் அதிகாரிகளுடனான கூட்டம் நடைபெற்றது.  இதன்போது அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்  –

கடந்த அரசின் ஆட்சிக் காலத்தின் போது வடபகுதி தக்களுக்காக வந்த விடமைப்புத் திட்டங்கள் சிலரது அரசியல் சுயனலங்கள் காரணமாக மக்களுக்கு கிடைக்காது கைநழுவிப்போனது.அனால் தற்போது குறித்த துறைசார் அமைச்சு எனக்கு வழங்கப்பட்டுள்ளமையால் தடைப்பட்டுப் போன வீடமைப்புத் திட்டத்தை மீண்டும் முன்னெடுப்பதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டுள்ளேன்.

அதற்கான முன்னேற்பாடாகத்தான் இன்றைய சந்திப்பு அமைந்துள்ளது. அத்துடன் வீடமைப்பது தொடர்பான ஆரோசனைகளையும் உள்நாட்டு, வெளிநாட்டு துறைசார் நிபுனர்களுடன் ஆலோசித்துள்ளேன்.

அந்தவகையில் இம்மாதம் (நவம்பர் மாதம்) முதல் குறித்த திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதுடன் அத்திட்டத்தை விரைவில் முழுமையாக மக்களுக்கு சென்றடைய அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளவுள்ளேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இக்கலந்துரையாடலின்போது அமைச்சின் செயலாளர் சிவஞான சோதியும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

45347965_549210072194114_9190551395722330112_n

Related posts:

யுத்தத்தின் பின் வடக்கில் பொருளாதாரப் புரட்சி மேற்கொள்ளப்பட்டிருதல் வேண்டும் – டக்ளஸ் எம்.பி. சுட்டி...
நாட்டின் முக்கியத்துவம் மிக்க பகுதிகள் பிற நாடுகளின் தேவைகளுக்காக விற்கப்படுமானால் நாட்டின் எதிர்கா...
இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்திற்கு அதிகாலை வேளையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திடீர் விஜயம்!