ரணிலே தமிழ் மக்களின் தெரிவாக இருக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் !
Sunday, August 25th, 2024
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணிலே எமது தெரிவாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தற்கால அரசியல் சூழலுக்கும் தமிழ் மக்களுக்கும் சரியான தெரிவாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
மன்னாருக்கான வீஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர், பேசாலை கடல் உணவுகள் பதனிடும் தனியார் தொழிற்சாலைக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு பணியாற்றும் பணியாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதனை தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –
“எமது மக்களுக்கு தற்போதும் ஜனாதிபதி தேர்தல் என்ற வாய்ப்பு கிடைத்துள்ளது அந்த வாய்ப்பை பயன்படுத்தி நாங்கள் இன்றைய ஜனாதிபதியுடன் சேர்ந்து பயணிப்பதன் ஊடாக நாடும் எங்களுடைய மக்களும் அதிக பயன்களை பெறலாம் என தான் நம்புவதாகவும்,
கடந்த கால தவறுகளில் இருந்து மக்கள் விடுபட்டு, எதிர்வரும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கு பங்களிப்பதன் ஊடாக, எமது மக்கள் எதிர்கொள்ளுகின்ற பல்வேறு பிரச்சினைகளில் இருந்து வெளியில் வரலாம் என்றும் அதற்காக எம்முடன் அணி திரளவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
000
Related posts:
|
|
|


