யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஷேட ஏற்பாடுகள் மூலம் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கோரிக்கை!

அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்கள் தற்போது நாடளாவிய ரீதியில் வீடமைப்புத் திட்டங்களை மாதிரிக் கிராமங்கள் வடிவிலும் மேற்கொண்டு வருகின்றார். அவரது தந்தையார் முன்னாள் ஜனாதிபதி மறைந்த ரணசிங்ஹ பிரேமதாச அவர்கள் இத்தகைய மாதிரிக் கிராமங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்த காலகட்டங்களில் யாழ்ப்பாணத்திற்கென சில திட்டங்கள் கிடைத்திருந்தன.
அதன் பின்னர் வீடமைப்பு அமைச்சின் கீழ் இத்தகையத் திட்டங்கள் கிடைக்கப்பெறவில்லை. வீடமைப்பிற்கான கடன் வசதிகள் வழங்கப்படுகின்றன.
யுத்தம் முடிவுற்ற காலகட்டங்களின்போது எமது மக்களுக்கு போதிய வீடமைப்புத் திட்டங்கள் இல்லாத நிலையில் வீடமைப்பு அமைச்சின் மூலமாக வீடுகளை அமைத்துக் கொள்வதற்கு கடன்களைப் பெற்ற வடக்கு – கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பலரும் பொருளாதார வசதிகளின்மை காரணமாக வீடுகளை பாதி கட்டி முடித்த நிலையில் அவற்றை முழுமையாக்க முடியாமலும் கடன் தொகைகளை மீளக் கட்ட முடியாமலும் மிகவும் பாதிக்கப்பட்டதொரு நிலையிலேயே இருந்து வருகின்றனர்.
அதன் பின்னரான காலப் பகுதிகளில் எமது மக்களில் மேலும் பலருக்கு பல்வேறு உதவித் திட்டங்களின் மூலமாக வீடமைப்பு வசதிகள் கிட்டியுள்ள நிலையில் மேற்படி மக்களுக்கு அத்தகைய திட்டங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில்இமேற்படி மக்கள் தொடர்பில் – யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற வகையில்இ ஒரு விN~டமான ஏற்பாட்டினை முன்னெடுத்துஇ அம் மக்களின் கடன்களை இரத்துச் செய்வதற்கும்இ அவர்களுக்கு ஏனைய உதவித் திட்டங்களின் கீழ்; வீடமைப்புத் திட்டங்கள் கிடைப்பதற்கும் ஏற்பாடுகளை மேற்கொண்டு உதவுமாறு கௌரவ அமைச்சர் அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய தினம் சுகாதார போசணை சுதேச மருத்துவம் மற்றும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சு ஆகிய இரு அமைச்சுக்கள் தொடர்பான குழநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|