யாழ்.மாவட்ட செயலக நிர்வாக கட்டிடத்தொகுதி பிரதமரால் திறந்துவைப்பு!

யாழ் மாவட்ட செயலக நிர்வாக கட்டிடத்தொகுதியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார்
மாவட்டச் செயலக வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்தொகுதியையே பிரதமர் இன்றையதினம் (17) உத்தியோகபூர்வமாக திறந்துவைத்து பாவனைக்காக கையளித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிநடத்தலில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன மற்றும் பிரதி அமைச்சர் அன்டனி நிமல் லான்சா வர்ணகுலசூரிய ஆகியோரின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இன்று யாழ்மாவட்ட செயலக நிர்வாக கட்டிடத்தொகுதியை திறந்துவைத்தார்.
இந்நிழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தேர்தல் முறை மாற்றம் என்பது மக்கள் நலன்சார்ந்ததாகவே அமையப்பெறல் வேண்டும் - ஊடக சந்திப்பில் டக்ளஸ் தே...
வடமராட்சி பகுதி கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் துவானந்தா களஆராய்வு!
வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு - அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பிரஸ்...
|
|