யாழ் போதனா வைத்தியசாலை தொழிலாளர் சங்க நிர்வாகத்தினர் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் முறையீடு!

யாழ் போதனா வைத்தியசாலையில் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் யாழ் போதனா வைத்தியசாலை தொழிலாளர் சங்க நிர்வாகத்தினர் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினர்.
யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் குறித்த சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது யாழ் போதனா வைத்தியசாலை தொழிலாளர் சங்க நிர்வாகத்தினர் மேலும் குறிப்பிடுகையில் தற்போது தமது தொழில் பிரிவுகளில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாகவும் இது திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படும் ஒரு நடவடிக்கையே என தாம் பார்ப்பதாகவும் சுட்டிக் காட்டியிருந்தனர்.
அத்துடன் கடந்த ஆட்சி காலத்தில் தாம் நிறைவாக தமது சேவையை மேற்கொள்ள முடிந்திருந்ததென்றும் கௌரவமாக நடத்தப்பட்டதாகவும் தெரிவித்த அவர்கள் தற்போதைய ஆட்சிக் காலத்தில் பல துன்பங்களை மட்டுமல்லாது அவமானங்களையும் எதிர்கொள்ள நேரிடுவதாகவும் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் மிக வருத்தத்துடன் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இந்நிலையில் வைத்தியசாலை தொழிலாளர் சங்க நிர்வாகத்தினரது பிரச்சினைகளை தொடர்பில் அவதானம் செலுத்திய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குறித்த விடயம் தொடர்பில் துறைசார் தரப்பினருடன் ஆராய்ந்து தீர்வுகளை பெற்றுத்தர முயற்சிப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச்சந்திப்பின்போது கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன், யாழ் மாநகர சபை உறுப்பினர் திருமதி யோகேஸ்வரி பற்கணராஜா உள்ளிட்ட முக்கியர்தர்கள் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|