யாழ். பல்கலை இந்து பீடத்திற்கு மாணவர்களை உள்ளீர்க்க தீர்மானம்!
Thursday, November 17th, 2022
யாழ்.பல்கலைக் கழகத்தின் இந்து பீடத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டினை மேற்கொண்டு வருடந்தோறும் சுமார் 100 மாணவர்களை உள்வாங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் துறைசார் அமைச்சர் சுசில் பிறேம்ஜெயந்தவிற்கும் இடையில் கடந்த(14.11.2022) அமைச்சரவை கூட்டத்தினை தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு, பல்கலைக் கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்து நாகரீகம், சமஸ்கிரதம் மற்றும் சைவ சித்தாந்தம் ஆகிய கற்கைநெறிகளைக் கொண்ட தனித்துவமான பீடமாக, கடந்த 2019 ஆம் ஆண்டு இந்து பீடம் உருவாக்கப்பட்ட போதிலும், தேவையான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படாத நிலையிலேயே தற்போது குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.- 17.11.2022
Related posts:
கைகளினால் அள்ளித் தருவதை வாங்குங்கள் - புள்ளடிகளை சிந்தித்து இடுங்கள்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெர...
மீண்டும் கடற்றொழில் அமைச்சரானார் டக்ளஸ் தேவானந்தா – தமிழ் மக்களின் தோல்வி காணாத ஏக தலைவரின் பதவியேற்...
சட்டவிரோதத் தொழில் முறைகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் யாழ் மாவட்ட ...
|
|
|
தொழில்வாய்ப்பு கேட்பதால் இன உரிமையை அடகு வைக்க வேண்டி வரும் என சுயலாப தமிழ் அரசியல் தலைமைகள் போல் கூ...
காலஞ்சென்ற ஞானசார தேரரின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா...
கிராம மட்டங்களில் கட்சியின் செயற்றிட்டங்களை வலுவுள்ளதாகக் கட்டியெழுப்புவோம் - டக்ளஸ் தேவானந்தா!


