யாழ் பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவத்துறைக்கென தனியான ஒரு பீடம் அமைக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி!
Monday, December 4th, 2017
யாழ் மாவட்டத்தில் கடந்த 1983ம் வருடத்திலிருந்து சித்த மருத்துவத் துறை சார்ந்த 5 ஆண்டு பாட நெறிகள் வழங்கப்பட்டு வருகின்ற போதிலும் அதற்கென இதுவரையில் யாழ் பல்கலைக்கழகத்தில் தனியான துறையோ பீடமோ இல்லாத நிலையில் அது ஒரு அலகாகவே இருந்து வருவதாகத் தெரிய வருகிறது.
எனவே சித்த மருத்துவத்துறைக்கென யாழ் பல்கலைக்கழகத்தில் ஒரு பீடத்தை ஏற்படுத்துவதற்குரிய சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து பார்த்து அதற்குரிய நடவடிக்கையினை எடுக்க முன்வருமாறும் கௌரவ அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய தினம் சுகாதார போசணை சுதேச மருத்துவம் மற்றும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சு ஆகிய இரு அமைச்சுக்கள் தொடர்பான குழநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts:
|
|
|


