யாழ் நகரப்பகுதி உணவக உரிமைகள் பொது சுகாதார பரிசோதகர்களால் எதிர்கொள்ளும் அசௌகரியம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடம் முறையீடு!

Tuesday, July 14th, 2020

யாழ் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் உணவகங்களை நடத்தும் உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் பொது சுகாதார தரப்பினரது இறுக்கமான நடைமுறைகளால் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடினர்.

இதன்போது அவர்கள் கோறுகையில் – உணவகங்களை கையாளும் தரப்பினரும் அதை மேற்பார்வை செய்யும் தரப்பினரும் சுகாதாரத்தை முன்னிறுத்தி செயற்படவேண்டும்.
இதை நாம் மிக அவதானத்துடன் கடைப்பிடித்து வருகின்றோம்.
அத்துடன் தாம் சுகாதார தர்ப்பினருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கும் போதும் சில பொது சுகாதார உத்தியோகத்தர்கள் உணவகங்களின் சுகாதார தன்மை குறித்து பல குற்றச்சாட்டுக்களை நீதின்றங்கலில் வழக்கு தாக்கல் செய்து கடைகலை மூடும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

பொது வாய்க்காலுக்குள் கழிவு நீரை குறிப்பாக கழிவு நீரை விடும்போது அதை தடுத்து தமது வருமான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முற்படுகின்றனர்.

ஆனால் மாநகர சபைக்கு நாம் மாதாந்தம் ஆயிரக்கணக்கில் வரி செலுத்தும் போதும் எமக்கான நடவடிக்கைகளை மாநகரசபை செய்யாது அசமந்தமாக இருப்பதால் வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பிட்ட பிரச்சினைகளை கட்டுப்பனடுத்தி மனச்சாட்சிக்கு மதிப்பளித்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டுதருமாறு கோரிக்கை விடுத்தனர்.

குறித்த் வியாபாரிகளின் நியாயமான கோரிக்கைகளை ஆராய்ந்தறிந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அது தொடர்பில் துறைசார் தரப்பினரை அழைத்து பேசி நியாயமான தீர்வை பெற்றுத்தர முயற்சிப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

பனங் கள் உற்பத்தியானது 20 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரமாகும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா தெர...
தமிழக மக்கள் மகிழ்வுடன் வாழும் நீதி ஆட்சி மலர வேண்டும் - தமிழக முதலமைச்சருக்கு அமைச்சர் டக்ளஸ் வாழ்த...
“நீதிக்கான அணுகல் நடமாடும் சேவை” வடக்கு மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது – அமை...

இளைஞர்களுக்கு எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கை கொடுக்கும் நல் வழிகாட்டிகளாக செயற்படுங்கள் - தோழர்கள் ம...
அமைச்சர் டக்ளஸ் சிறந்த ஒரு தலைவர் – தற்போது இருக்கும் அமைச்சர்களில் அவரே நல்ல அனுபவமும், ஆற்றலும் கொ...
அரசியலுரிமை விடயத்தில் எம்மை நம்புங்கள் - நாங்கள் உறுதிமொழி தருகின்றோம் – .ஈபி.டி.பியின் ஊடக பேச்சாள...