யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசியல் கைதிகள்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நன்றி தெரிவித்த உறவுகள்!

Monday, March 30th, 2020

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளை யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு இடம் மாற்றம்’ செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு தந்தமைக்காக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் தமது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

கடந்த 21 ஆம் திகதி அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்த கைதிகள் தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றை காரணம் காட்டி சிறைச்சாலையை உடைத்து தப்பிச்செல்ல முயன்றதால் ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்து இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிச் கூட்டில் இருவர் மரணமடைந்திருந்தனர்.

இதையடுத்து அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நிலைமை தொடர்பிலும் அவர்களது பாதுகாப்பு தொடர்பிலும் உறுதி செய்து தருமாறு அவர்களது உறவினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

குறித்த பலதரப்பினரதும் கோரிக்கைக்கு அமைவாக சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் துறைசார் அமைச்சு ஆகியோருடன் தொடர்புகளை ஏற்படுத்தி தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி செய்துகொண்டார்

இந்நிலையில் தொடர்ந்தும் குறித்த சிறைச்சாலையில் அரசியல் கைதிகளாக தமது உறவுகள் இருப்பது தமக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அவர்களை யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு இடமாற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து துறைசார் அமைச்சு மற்றும் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட பேச்சுக்களை அடுத்து குறித்த 11 தமிழ் அரசியல் கைதிகளும் யாழ்ப்பணம் சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையிலேயே குறித்த தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு தமது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்திருந்ததுடன் இதே போன்று அவர்களது விடுதலை தொடர்பிலும் நடவடிக்கை மேற்கொண்டு தருமாறும் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


தென் இந்தியத் திருச்சபையின் முன்னாள் பேராயர் தலைமையிலான குழுவினர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்...
பாண்டிச்சேரி - காங்கேசன்துறை படகுச் சேவை எந்த நேரத்திலும் ஆரம்பிக்கப்படலாம் - அமைச்சர் டக்ளஸ் தெரிவி...
பள்ளிமுனை வான்தோண்டும் கோரிக்கையை நிறைவேற்ற துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு!