யாழ்ப்பாணத்திலும்  நவீன வசதிகளுடன் கூடிய வானிலை அவதான நிலையம்  அமைப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வாலியுறுத்து!

Thursday, December 1st, 2016

கொழும்பில் வானிலை அவதான நிலையம் ஒன்று இருக்கிறது. அது நாங்கள் கண்ட நாளிலிருந்து அதே நிலையில்தான் இருக்கிறதே தவிர, ஏதேனும் நவீனமயப் படுத்தப்பட்டுள்ளதா என்பது பற்றி அறிய விரும்புவதுடன் அந்தக் கட்டிடத்தைச் சுற்றித் தற்போது பல உயரமான கட்டிடங்கள் தோன்றியுள்ள நிலையில், அதன் தரம் தற்போது எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் அறிய விரும்புகின்றேன் – என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்..

இன்றைய தினம் வரவு – செலவுத் திட்டம் தொடர்பான விவாதத்தில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் எனது கருத்துக்களை முன்வைது உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

மேலும்  யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் இயற்கை அனர்த்தப் பாதிப்பு இருந்து வருவதால் அங்கு ஒரு வானிலை அவதான நிலையத்தை நவீன வசதிகளுடன் அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து உதவுமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

அதே நேரம், யாழ்ப்பாணம் மாவட்டத்திலே தற்போது அனர்த்த ஆபத்து மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு குறிப்பாக 18 அனர்த்தங்கள் குறித்து ஆராய்ந்து அறியப்பட்டுள்ளதாகத் தெரிய வரும் நிலையில், அதற்குரிய நிதி ஒதுக்கீடுகளை வழங்கி குறித்த அனர்த்தங்களை முன்கூட்டியே தடுப்பதற்கும்,

அதே நேரம், இவ்வாறான  அனர்த்த ஆபத்து மதிப்பீடுகளை ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் முன்னெடுப்பதற்கும்,

அதன் அடிப்படையில் நிலைத்து நிற்கக்கூடிய அபிவிருத்தி நடவடிக்கைகளை ஏனைய அபிவிருத்தி தொடர்பான அமைச்சுக்களுடன் குறிப்பாக வீடமைப்பு, விவசாயம் போன்ற விடயங்களில் இணைந்து முன்னெடுப்பதற்கும்,

அதே நேரம், வடக்கு மாகாணத்தில் ஆழியவளை – மாவிலங்கை அனர்த்த வெளியேற்றுப் பாதை அபிவிருத்திக்கென ஏற்கனவே திட்ட மதிப்பீடுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

Untitled-3 copy

Related posts:

உள்ளுராட்சி மன்றங்கள் தரமுயர்ந்தது! எமது கோரிக்கை நிறைவேறியது!! வடக்கில் 3000பேருக்கு அரச வேலைவாப்பு...
சர்வதேச கடற்றொழிலாளர் தினத்தை முன்னிட்டு விசேட நல நிதி கொடுப்பனவுகள் கடற்றொழிலாளர்களின் பிள்ளைகளுக்க...
யாழ் மாவட்ட கடற்றொழில் சங்கங்களின் சம்மேளன பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கொழும்பில் கல...