மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் தந்தையாரது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலிமரியாதை!

மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் தந்தையார் சதாசிவம் மாணிக்கவாசகரின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலிமரியாதை செலுத்தியுள்ளார்.
வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் ஓய்வுபெற்ற ஆசிரியருமான சதாசிவம் மாணிக்கவாசகர் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் காலமானார். இதையடுத்து நேற்றையதினம் அன்னாரது பூதவுடல் யாழ்ப்பாணம் எடுத்துவரப்பட்டது.
இந்நிலையில் யாழ்ப்பாணம் கொக்குவில் கேணியடியில் உள்ள அன்னாரது இளைய புதல்வரது இல்லத்தில் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில், செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலிமரியாதை செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்கள் நண்பர்களுக்கும் தமது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|