முல்லை பால் பதனிடும் தொழிற்சாலையின் செயற்பாடுகளை சீராக முன்னெடுத்துச் செல்வதற்கான எரிபொருள் கிடைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Wednesday, August 17th, 2022

முல்லைத்தீவை தளமாக் கொண்டு செயற்பட்டு வருகின்ற முல்லை பால் பதனிடும் தொழிற்சாலையின் செயற்பாடுகளை சீராக முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான எரிபொருட்கள் தொடர்ச்சியாக கிடைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று சந்தித்த குறித்த நிறுவனத்தின் இயக்குநர்கள், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மற்றும் வவுனியா போன்ற மாவட்டங்களை சேர்ந்த சுமார் 70 பண்ணையாளர்களிடம் தினந்தோறும் பாலை சேகரித்து வாராந்தம் 7000 லீற்றம் பால் சார் உற்பத்திகளை தூய்மையான முறையில் மேற்கொண்டு வருவதாகவும், நாடடில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு தமது தொழில் நடவடிக்கைகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அவதானம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி குறித்த பால் உற்பத்தி நிறுவனத்திற்கு தேவையான எரிபொருள் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார்.

Related posts: