முன்பள்ளி ஆசிரியர்களின் ஆற்றல்கள் மேம்படுத்தப்பட்டு சேவைகள் விரிவுபடுத்தப்படும் – பொருளாதார ரீதியிலும் அவர்களை வலுப்படுத்த முயற்சி – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
Monday, December 4th, 2023
எமது எதிர்கால சிறார்களினது நலன்களை கருத்திற் கொண்டு முன்பள்ளி ஆசிரியர்களின் ஆற்றல்கள் மேம்படுத்தப்பட்டு அவர்களது சேவைகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டும் அவர்களைபொருளாதார ரீதியிலும் வலுப்பெற நடவடிக்கை மேற்கொள்ள முயற்சிகள் எடுக்கப்படும். என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பலதரப்பட்ட மக்களை சந்தித்து அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து வரும் நிலையில் நேற்று 03.12.2023 கிளிநொச்சி மாவட்ட வடக்கு வலையத்தை சர்ந்த முன்பள்ளி ஆசிரியர்கள் அமைச்சரை சந்தித்திருந்தனர். .
இதன்போது தாம் எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தனர். அதன்போதே இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்..
மேலும் நாம் நீண்ட காலமாக முன்பள்ளிச் சிறார்களின் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்திருக்கும் நிலையில் மிக குறுகிய வேதனத்துடன் பணியாற்றிவருவதாகவும் இதனால் நாம் குடும்ப சூழ்நிலையில் பல்வேறு அசௌகரியங்களையும் எதிர்கொண்டுவருவதாகவும் தமக்கான கொடுப்பணவை முடிந்தளவு பெற்றுத்தந்தது உதவுமாறு குறித்த ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


