முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில்ஆராய்வு!

Wednesday, June 1st, 2022

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி சூழலில், கடற்றொழில் அமைச்சிற்குள் உள்ளடங்கியுள்ள திணைக்களங்களினால் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்னாயக்க மற்றும் கடற்றொழில் திணைக்களம், இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம், இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனம், நக்டா, நாரா, வடகடல், சீநோர் ஆகிய திணைக்களங்களின் நிறைவேற்று அதிகாரிகள், தாங்கள் எதிர்கொள்ளுகின்ற நடைமுறை சவால்கள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக கருத்துக்களை முன்வைத்து கலந்துரையாடினர். – 01.06.2022

Related posts:

சுயலாப அரசியல் தலைமைகளின் தவறான வழிநடத்தலால் தமிழ் சமூகமும் மாசடைந்துள்ளது - நாடாளுமன்றில் டக்ளஸ் எம...
தகரத்திற்கு தங்க முலாம்!.. தேர்தல் கோசத்திற்கு தமிழ் தேசிய முலாம் பூசப்படுகின்றது எனக் கூறுகின்றார்...
உள்ளூரில் உற்பத்திசெய்யப்படும் ரின் மீன்களின் தர நிலை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் த...