மீண்டும் சேவையில் குமுதினி – பார்வையிட்டார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, June 23rd, 2023

நீண்ட வரலாற்று தொடர்பை கொண்ட குமுதினிப் படகு மீண்டும் சேவையில் இணைவதற்கு தயாராகியுள்ள நிலையில்,  இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார்.

யாழ்.குறிகட்டுவான் மற்றும் நெடுந்தீவு பயணிகளுக்கான கடல் வழிப் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட குமுதினி படகு அடிக்கடி செயலிழந்த நிலையில் வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் திருத்தப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்தது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் குமுதினி படகின் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

குமுதினி படகு 1968 ஆம் ஆண்டு முதல் யாழ்.நெடுந்தீவிற்கான போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts:


தாயக தேசத்தின் விடிவொன்றே தமிழ் மக்களின் புத்தாண்டு நிமிர்வாகும் - புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ...
ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் வடக்கு கிழக்கு பிரதேசங்கள் பாதிக்கப்படுவது உண்மையே – ஆனாலும் விஷேட சலுகை...
நகரசபையாக தரமுயரும் கரைச்சி பிரதேச சபை - எல்லை நிர்ணயம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் கலந்...