மாற்றுத்திறனாளிகளுக்கான விஷேட திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Saturday, November 19th, 2016

யுத்தம் காரணமாக அவயங்களை இழந்து மாற்றுத் திறனாளிகளாக ஆக்கப்பட்டோரின் எண்ணிக்கையும்  பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கையும் வடக்கு – கிழக்கு பகுதிகளில் அதிகமாக உள்ளது. ஆகவே இவர்களுக்கென விஷேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

நேற்றையதினம் நாடாளுமன்றில் புதிய ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தின்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

தற்போது நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டு வருகின்ற அரச நிவாரணத் திட்டங்களால் இம் மக்களது பிரச்சினைகளை முழுமையாகத் தீர்க்க முடியாது என்பதையும் நான் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

012

Related posts:


மயிலிட்டி குளத்தடி தேவியார்கொல்லை கண்ணகை அம்மன் ஆலய கட்டட நிர்மாணத்துக்கான அடிக்கல்லை அமைச்சர் டக்ளஸ...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை - கடற்றொழில் - நீர்வேளாண்மையை முன்னகர்த்த மற்றுமொரு முன்னெடுப்பு!
மாதகல் தோமையார் கடற்றொழில் சங்கத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் - எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்ப...