மானிப்பாய் Big Star விளையாட்டுக் கழகத்திற்கு மைதானம் அமைப்பதற்கான உத்தேச இடங்களை பார்வையிட்டார் டக்ளஸ் எம்.பி.!

இளைஞர் யுவதிகளின் விளையாட்டுத்துறை ஆர்வத்தை மேம்படுத்தும் முயற்சியாக மானிப்பாய் கட்டுடை பகுதியில் உள்ள Big Star விளையாட்டுக் கழகத்திற்கான விளையாட்டு மைதானத்தை அமைத்துக் கொடுப்பதற்கான முயற்சிகளை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுள்ளார்.
குறித்த விளையாட்டுக் கழகத்தின் நிர்வாகத்தினர் மற்றும் அப்பகுதி பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க இன்றையதினம் அப்பகுதிக்கு விஜயம் செய்த செயலாளர் நாயகம் அவர்கள் விளையாட்டுக் கழகத்தின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடியதுடன் விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட உத்தேச இடங்களையும் பார்வையிட்டார்.
இதன்போது கட்சியின் யாழ். மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன், கட்சியின் வலிமேற்க பிரதெச நிர்வாக செயலாளர் வெலிச்சோர் அன்ரன் ஜோண்சன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் உடனிருந்தனர்.
Related posts:
|
|