மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – பிரதேச கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்!

Wednesday, May 22nd, 2024

மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, துறைமுகத்தின் செயற்பாடுகளை பார்வையிட்டதுடன், அந்தப் பிரதேச கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடினார்.

குறிப்பாக, சட்டவிரோத தொழில்முறைகளை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம், மயிலிட்டித் துறைமுகத்தில் படகுகள் நிறுத்துப்படுதால் ஏற்படும் இடநெருக்கடி உட்பட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

இதனிடையே தையிட்டி, ஆவழை கடற்றொழிலாளர் இறங்குதுறையை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அந்தப் பகுதியில் களங்கண்டி தொழிலில் ஈபடுவதற்கு பிரதேச கடற்றொழிலாளர்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாக துறைசார் அதிகாரிகள் மற்றும் பிரதேச கடற்றொழிலாளர்களுடன், ஆராய்ந்தறிந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது

இதனிடையே புன்னாலைக்கட்டுவன் தெற்கு, ஜே/207 கிராமசேவகர் பிரிவில் வசித்து வருகி்ன்ற சுமார் 20 குடும்பங்களுகான அவசிய தேவைகளான வீதி மற்றும் மின்சார இணைப்பு ஆகிவற்றை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கவனம் செலுத்தினார்.

குறித்த பகுதிக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்ட அமைச்சர்,உ சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடனும் குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: