மயிலிட்டி மீன்பிடித் துறைமுக காவல் பணியாளர்கள் இருவர் நியமனம் – கடிதங்களை வழங்கிவைத்தார் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, May 11th, 2021

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்திற்கான காவல் பணியாளர்கள் இருவருக்கான நியமனக் கடிதங்களை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்தார்.

யுத்தம் காரணமாக சுமார் இருபது வருடங்களுக்கு அதிகமாக உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்த மயிலிட்டித் துறைமுகம், கடந்த ஆட்சிக்காலத்தில் மீண்டும்புனரமைக்கப்பட்டிருந்தது.

எனினும், குறித்த துறைமுகத்தினை வினைத்திறனாக செயற்படுத்தி பிரதேச கடற்றொழிலாளர்களுக்கு நன்மை ஏற்படுத்தும் திட்டமிடல்கள் ஏதும் இன்றி, அரசியல் நலன்களை மாத்திரம் அடிப்படையாக கொண்டு  மயிலிட்டி துறைமுகம் புனரமைக்கப்பட்டுள்ளதாக பிரதேச கடற்றொழிலாளர்களினால் விசனம் வெளியிடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், கடற்றொழில் அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால், மயிலிட்டி துறைமுகத்தினை பிரதேச கடற்றொழிலாளர்களுக்கு நன்மையளிக்கும் வகையில் செயற்படுத்துவதற்கு பலவேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், துறைமுகத்திற்கு தேவையான காவல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

அரசில் நாம் தொடர்ந்தும் பங்கெடுத்திருந்தால் மக்களின் பிரச்சினைகள் பலவற்றிற்கு தீர்வுகளை கண்டிருக்க ம...
தேவைப்படும்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பெரும்பான்மையை நிரூபிப்பார் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் அரசியல் சூழ்நிலை குறித்து ஆராயும் விஷேட பொதுக் கூட்டம் !

தமிழ் மக்களின் பிரச்சினைகள் வேறு : தமிழ் தரகு அரசியல் கட்சிகளின் பிரச்சினைகள் வேறு – நாடாளுமன்றில் ச...
இனங்களின் ஐக்கியத்திற்காக பாடுபட்டவர் அமரர் சாலிந்த திசாநாயக்க – டக்ளஸ் எம்.பி புகழாரம்!
வருத்தப்படாத வாலிபர் சங்க உள்ளக விளையாட்டு அரங்கை வினைத் திறனாக செயற்படுத்த கட்சி நிதியிலிருந்து விள...