மன்னார் மறை மாவட்ட ஆயர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடையே விஷேட சந்திப்பு!

Saturday, May 23rd, 2020

மன்னார் மறை மாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி பிடலிஸ் லயனல் இமானுவேல் பெர்னான்டோ ஆண்டகையை  கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்து கலந்துரையாடியுள்ளார்

மன்னார் மாவட்டத்திற்கு இன்ரைறயதினம் வியஜம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பல நிகழ்வுகளிலும் சந்திப்புக்களையும் மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் மன்னார் மறை மாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி பிடலிஸ் லயனல் இமானுவேல் பெர்னான்டோ ஆண்டகையின் இல்லத்திற்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆண்டகையுடன்  விஷேட சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது சமகால அரசியல் நிலைமைகள் மற்றும் கொரோனா கால மக்களின் தேவைப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

மக்கள் குடியிருப்புக்களை அண்டிய பகுதிகளில் ஆயுதக் களஞ்சியங்கள் தவிர்க்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந...
தேர்தல் வெற்றியின் மூலம் தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு பொற்கா லத்தை  உருவாக்குவோம் - கட்சியின் வடக்கு ...
ஜீலை 1 ஆம் திகதியிலிருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை செயற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும...