மன்னார் கோந்தைப்பிட்டி முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கரிசனை – நிலைமைகள் குறித்து ஆராய நேரில் கள விஜயம்!

Sunday, January 14th, 2024

கோந்தைப்பிட்டியில் வாழும் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் இடப்பிரச்சனையை ஆராய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்கு கள விஜயம் செய்தார்.

புராதன சின்னங்கள் அமைந்துள்ள பிரதேசம் என தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட மன்னார் கோந்தைபிட்டி கோட்டைக்கு அருகாமையில் உள்ள முஸ்லிம் மக்கள் பூர்வீகமாக வாழும்  பிரதேசங்கள் இனங்கானப்பட்டுள்ள நிலையில் அப் பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மக்கள் மத்தியில் தமது இருப்பிடங்கள் பறிபோய்விடும் என்று அச்சம் நிலவியுள்ள சூழ்நிலையால் இது விடயம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில் குறித்த பகுதிகளுக்கு விஜயம் செய்த அமைச்சர் நிலைமைகளை ஆராய்ந்தார்.

குறித்த பிரச்சனை தொடர்பில் விரைவாக ஜனாதிபதியின் கவனத்துற்கு எடுத்துச்சென்று சுமுகமான தீர்வைப் பெற்றுத் தருவதாக தெரிவித்துள்ளார்.

முன்பதாக மன்னார் பேரூந்து நிலையப்பகுதிக்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதன் நிலைமைகளை பார்வையிட்டார்.

மன்னார்  நகரில் பேரூந்து நிலையத்தினை அண்டிய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வர்த்தக நிலையங்களுக்கு மாற்றிடாக புதிய கட்டிட அங்காடியாக அமைத்து தருமாறு குறித்த வர்த்தக பிரதிநிதிகளால் விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் அங்கு நேரடியாக விஜயம் செய்து பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  அவர்கள், வர்த்தகர்களின் கோரிக்கை தொடர்பில் கேட்டறிந்து கொண்டார் .

கடந்த காலங்களில் வாழ்வாதாரத்திற்காக குறித்த பேரூந்து தரிப்பிடத்தினை அண்டிய பகுதியில் தற்காலிக  வியாபார நிலையங்களை அமைத்து கொடுத்துள்ள மன்னார் நகர சபை நிர்வாகம் அவர்களுக்கு நிரந்தர வர்த்தக நிலைய கட்டிடம் அமைத்து தருவதாக வாக்குறுதி வழங்கியுள்ள நிலையில் இதுவரை அவர்களுக்கான  நிரந்தர வர்த்தக நிலையங்கள் அமைத்து கொடுக்கப்படவில்லை என்று வர்த்தகப் பிரதிநிதிகள் அமைச்சரிடம் தெரிவித்திருந்தமை குறிழப்பிடத்தக்கது

000

Related posts:

நிலையற்றதொரு ஆட்சியின் பிரதிபலிப்புகளை இந்த நாட்டு மக்கள் வீதிகளில் அனுபவிக்கின்றனர் – டக்ளஸ் எம்.பி...
அழிந்த ஆலயங்களை புனரமைத்து இந்துக்களின் அடையாளத்தினை பேணிப் பாதுகாத்தவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா -...
திரும்பத் திரும்ப கூறுவதால் பொய் உண்மையாகிவிடாது - விழிப்பாக இருக்குமாறு கடற்றொழிலாளர்களுக்கு அமைச்...