மத ரீதியான தூண்டுதல்கள் இன ஐக்கியத்தை சீர்குலைக்கும் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவிப்பு!

மத ரீதியான செய்தியொன்றை வலம்புரிப் பத்திரிகை வெளியிட்டதாக கூறி அந்த நிறுவனத்தின் அலுவலகத்தினுள் ஒரு பகுதி மக்கள் புகுந்து போராட்டம் என்ற பெயரில் தமது எதிர்ப்பை வெளிக்காட்டிய விதமானது இலங்கை வாழ் இந்து மற்றும் கிறிஸ்வர்களிடையே
இன நல்லிணக்கத்தை சீர்குலைக்க சில விசமிகளால் முன்னெடுக்கப்படும் ஒரு செயலாகவே அமைந்திருந்தாகவே கருதப்படுகின்றது.
அந்தவகையில் மத நல்லிணக்கத்தை பாதிக்கும் இவ்வாறான செயற்பாடுகள் கண்டிக்கப்பட வேண்டியதுடன் இனிவருங் காலங்களில் இவ்வாறான புரிதலின்றிய செயற்பாடுகள் நடைபெறாதிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்துத்தரப்பினரும் செயற்படுவது அவசியமாகும் என்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளது.
Related posts:
வாழ்வாதாரத்தை பாதுகாக்காது வாய்ச்சவாடல் விடுவதால் பயனில்லை - கோரக்கன்கட்டு மக்கள் மத்தியில் செயலாளர்...
சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள் - சமுர்த்தி பயனாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!
கடற்றொழிலாளர் விவகாரத்தில் வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றிணைவு மகிழ்ச்சியளிக்கின்றது. - அமைச...
|
|