மட்டுவிலில் பொருளாதார மத்திய நிலைய கட்டுமாண பணிகள் நிறைவு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் நேரில் ஆராய்வு!

Thursday, November 3rd, 2022


யாழ்ப்பாணம், மட்டுவிலில் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தின் கட்டுமான வேலைகள் நிறைவடைந்துள்ள நிலையில்,  அதனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க  அமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோர்  பார்வையிட்டனர்.

சுமார்  200 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 20 வர்த்தக நிலையங்களை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ள வியாபார மத்திய நிலையத்தினை விவசாயிகளுக்கும் மக்களும் நன்மையளிக்கும் வகையில் வினைத்திறனாக செயற்படுத்துவது தொடர்பாக, மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள், விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தகள்களின் பிரதிநிகள் ஆகியோருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோர் இதன்போது ஆலோசனைகளை நடத்தினர். – 03.11.2022

Related posts: