மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஷேட விஜயம் – மாவட்டத்தின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குமாறும் துறைசார் அதிகாரிகளுக்கு உத்தரவு!

Saturday, May 4th, 2024

மட்டக்களப்பு கரையாக்கந்தீவு மற்றும் ஓட்டமாவடி, பகுதிகளில் இறால் வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்து கலந்துரையாடியுள்ளார்..

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள நெக்டா நிறுவனத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் இறால் குஞ்சுகளைப் பெற்றுக்கொள்வதில் இருக்கும் சவால்கள் மற்றும் மின்சார வசதி தொடர்பான விடயங்களும் ஆராயப்பட்டது.

இதன்போது புதுக்குடியிருப்பிலுள்ள  இறால் குஞ்சு உற்பத்தி நிலையத்தை அடுத்த மாதம் நடுப்பகுதிக்கு மீள ஆரம்பித்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இறால் பண்ணையாளர்களுக்கு தேவையான இறால் குஞ்சுகளை இந்த மாவட்டத்திலேயே உற்பத்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காணியில் நீண்டகாலம் இயங்காமல் இருக்கும் ஐஸ் தொழிற்சாலை பகுதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார்.

குறித்த ஐஸ் தொழிற்சாலையை மீள இயக்குவதற்கான அறிக்கையை தயாரித்து வழங்குமாறு மீன்பிடித் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

முன்பதாக பாலமீன்மடுவில் அமைந்துள்ள இறங்குதுறைப் பகுதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார். 

பாலமீன்மடு இறங்குதுறைக்கு வரும் படகுகளுக்கு இடையூறாக இருந்து வரும் கடல் முகப்பு பகுதியில் மணல் நிறைந்து காணப்படுவதால் அந்த மணலை அகற்றித் தருமாறு கடற்றொழில் சங்கத்தினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அமைச்சர் குறித்த பகுதியையும் இன்று பார்வையிட்டு கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் கிழக்கு மாகாண பொறியியலாளருக்கு உரிய பணிப்புரை வழங்கியிருந்தார்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று விஷேட விஜயத்தை மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. பாலமீன்மடுவில் அமைந்துள்ள வெளிச்ச வீட்டையும் பார்வையிட்டார்.

பாலமீன்மடு கடற்றொழில் சங்கத்தினர் குறித்த வெளிச்ச வீட்டுக்கு வர்ணம் தீட்டித் தருமாறும் வெளிச்ச வீட்டுக்கு மின் விளக்கைப்பொறுத்தித் தருமாறும்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம்  விடுத்த வேண்டுகோளை அடுத்து இன்று வெளிச்ச வீட்டை பார்வையிட்டதுடன் வெள்ளையடிக்கவும், மீன்விளக்கை பொறுத்தவும் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளருக்கு மதிப்பீட்டு அறிக்கையை தயாரித்து வழங்குமாறு பணிப்புரை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:

அதிகூடிய விரைவான பொருளதார மறுசீரமைப்பு ஒன்றின் தேவையினை நாடு எதிர்பார்த்துள்ளது - டக்ளஸ் எம்.பி சுட்...
வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் திடசித்தமும் மன உறுதியும் கொண்டவர்களையே நாடாளுமன்றுக்கு அனுப்புங்...
காணாமல் போன தனது மகனுக்கு பரிகாரம் பெற்றுத்தாருங்கள் - ஈ.பி.ஆர்.எல்.எப். முன்னாள் போராளியின் தாயார...

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வா தாரத்தை மேம்படு த்துவதில் நாம் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருகினறோம்...
மக்கள் நலனையே சிந்திப்பேன்: மக்கள் நலனையே செய்வேன் -  முல்லைத்தீவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவ...
தொடரும் சீரற்ற காலநிலை - கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில் விழிப்புணர்வுகளை தொடர்ச்சியாக முன்னெ...